பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை? தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Report Print Murali Murali in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் கூட்டம் நடந்தது.

இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.