தயவு செய்து கருணை காட்டுங்கள்! நளினியின் தாய் உருக்கம்

Report Print Murali Murali in இந்தியா

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் கருணை காட்ட வேண்டும் என நளினியின் தாய் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற நிலையில், குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேணடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நளினியின் தாய் தமிழக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

ஆளுநர் கருணை காட்ட வேண்டும். கருணையுள்ளத்தோடு எனது மகளை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் நளினியின் சட்டத்தரணி குறிப்பிடுகையில், “ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

27 வருடங்கள் அவர்கள் சிறைகளில் கழித்துள்ளார் என்பதை ஆளுநர் பரிசீலிப்பார் என நினைக்கிறேன். எழு பேரின் விடுதலைக்கும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

Latest Offers