சிறையில் உள்ள எழுவரையும் விடுவித்தால் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்

Report Print Tamilini in இந்தியா

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவித்தால் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரில் 3 பேர்தான் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

அந்த சம்பவத்தில் ராஜிவ் காந்தி மட்டும் உயிரிழக்கவில்லை. அவரோடு சேர்ந்து பல்வேறு காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அந்த கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கூடாது என்று கூறுகின்றனர்.

மேலும் தமிழக அரசு இவர்களை விடுவிக்க கவர்னருக்கு சிபாரிசு செய்தது தவறு. கவர்னர் இதில் எந்த முடிவும் தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது.

எனவேதான் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். அந்த அமைச்சகமும், மத்திய சட்டத் துறையும் இதில் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை.

எனவே இவர்களை விடுவித்தால் அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். காங்கிரஸ் கட்சி இந்த 7 பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது என கோவை விமான நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு தெரிவித்திருந்தார்.

Latest Offers