அந்த ஏழு பேரையும் விடுவிக்க கூடாது! பேரறிவாளன், நளினி உள்ளிட்டவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் நபர்

Report Print Murali Murali in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி கடற்கரை காந்தி சிலை முன்பு ராஜ்குமார் என்பவர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலையில் பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த தலைமைக்காவலரின் மகன் புதுச்சேரியில் காந்தி சிலை முன்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து தமிழக அரசு குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், அவர்களை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி இன்று ராஜ்குமார் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் தர்மன் உயிரிழந்தார். அவரது மகனான ராஜ்குமார் தனது தந்தை உயிரிழப்புக்குக் காரணமான 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக அவர், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு ராஜ்குமாரை பொலிஸார் சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இது குறித்து ராஜ்குமார் கூறியதாவது,

''எனது தந்தை தர்மன் 40 வயதில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தபோது எனக்கு 8 வயது. அம்மா, அக்கா, அண்ணன் என எங்கள் குடும்பத்தின் நிலையே பாதிக்கப்பட்டது.

எங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு தமிழர்களாகிய எங்கள் குடும்பம் படு துயரத்தைச் சந்தித்தது. வாழ்வுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உள்ளோம். சாப்பிட வழியில்லாச் சூழலையும் சந்தித்துள்ளோம்.

இனி எக்காலத்திலும் என் தந்தையை நான் காண இயலாது. அதே நேரத்தில் தற்போது சிறையில் உள்ளோரை அவர்களின் குடும்பத்தினர் பார்க்க இயலும். எனது தந்தையின் கொலைக்கு நீதிகேட்டு காந்தியடிகள் சிலை முன்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டேன்.

அதையடுத்து பொலிஸார் என்னை அழைத்துச் சென்று விசாரித்தபோது அனைத்தையும் தெரிவித்தேன். பின்னர் பொலிஸார். விடுவித்தனர். இவ்வழக்கில் சிறையில் உள்ளோரை விடுவிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

Latest Offers