ஜெயலலிதா மரணத்தில் திருப்பம்? எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை

Report Print Murali Murali in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விபரத்தை அப்பலோ மருத்துவமனை வெளியிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளதுடன், இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் ஏன் இடம்பெறவில்லை என பலர் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

இந்த விவகாரமே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. 1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

பின்னர் அவர் அமெரிக்காவிற்கு சிசிச்சைக்காக அனுப்பப்பட்டார். எம்.ஜி.ஆர் அமெரிக்காவிற்கு மருத்துவசிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

எம்.ஜி.ஆரை அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்ல எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை யார்? மருத்துவமனைக்கு தெரிவித்தது போன்ற விபரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.

எம்.ஜி.ஆரை அழைத்துச்சென்றது போன்று ஜெயலலிதாவை ஏன் அழைத்துச்செல்ல முயலவில்லை என்பதை கண்டறிவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம் இந்த விபரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers