ரஜுவ் காந்தி கொலை வழக்கில் இந்திய அரசியல்வாதியின் உறவினர்! வெளிவரும் உண்மை

Report Print Sujitha Sri in இந்தியா

ரஜுவ் காந்தி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஏழு பேரில் ஒருவர் தன்னுடைய உறவினர் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

ரஜுவ் காந்தி படுகொலை என்ற துன்பியல் நிகழ்வு மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் ஆண்டு நடந்தது. அதில் இந்த ஏழு தமிழர்களும் எந்த விதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல. பாவப்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்பொழுது ஆதரவு வழங்கியவர்கள். அவர்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை. அந்த ஏழு பேரையும் எனக்கு தெரியும்.

பலபேருக்கு தெரியாத உண்மை. ரவிச்சந்திரன் எனக்கு உறவினர். நான் யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. மேல் நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமியும் என்னுடைய உறவினர்.

அவருடைய கூடப்பிறந்த சகோதரி மகன் தான் ரவிச்சந்திரன். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போய் இணைந்தார். அவருடைய வாழ்வு அழிந்து விட்டது. அதே போன்று தான் மற்றவர்களுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers