மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!

Report Print Thayalan Thayalan in இந்தியா
மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளதாவது,

கர்நாடக மாநில - பெங்களூருக்கு சென்று ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை ராஜபக்ஷ பெங்களூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், தமிழ் ஆர்வலர்களும், மே 17 இயக்கம் போன்ற அமைப்பினரும், ´கோ பேக் ராஜபக்ஷ´ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த பத்திரிகை தலைவர், தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு எதிராக செயற்படுகிறார் என குறித்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு செய்த கொடுமைகளை அவரது நாளிதழ்களில் வெளியிடுவதில்லை.

இப்போது, ராஜபக்ஷவை இந்திய மண்ணுக்கு அழைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு போராட்டக்காரர்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.