இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை! டெல்லியில் சிவப்பு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in இந்தியா

டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ புகையிரத நிலையங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதால் பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

அத்துடன் பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பல விமான சேவைகள் பாகிஸ்தானுக்கான தமது விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் எல்லையிலும் அருகில் உள்ள எண்ணெய், எரிவாயு கிடங்குகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், புகையிரத நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட இந்திய துணை இராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா தீவிரவாதிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் அழிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து தொடர்ச்சியாக இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையில் பதற்றமான நிலை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.