இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு - இம்ரான் கான்

Report Print Thayalan Thayalan in இந்தியா
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு - இம்ரான் கான்

பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாதுகாப்பாக ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.