ராமேஸ்வர மீனவர்கள் நேற்றைய அவசர கூட்டத்தின் போது இன்று முதல் தொழிலுக்கு செல்வதில்லை என்று தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது கோரிக்கைக்கு தமிழக அரசாங்கமும், இந்திய மத்திய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
கடலில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பாடசாலை மாணவர் மற்றும் கல்லூரி மாணவர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறித்த மீனவர்கள் கோரியுள்ளனர்.
மாணவர்கள் இருவருக்கும் பரீட்சைக்கு தோற்ற வேண்டியுள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 37 படகுகள் மீள்திருத்த முடியாத காரணத்தினால் அவற்றுக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.