ஒரேயொரு டுவிட்டால் இந்தியாவை பரபரப்பாக்கிய மோடி..!:

Report Print Thayalan Thayalan in இந்தியா
ஒரேயொரு டுவிட்டால் இந்தியாவை பரபரப்பாக்கிய மோடி..!:

செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டு மக்களுக்கு இச்செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.

இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது என்றார்.

விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா வளர்ந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.