மானங்கெட்ட கூட்டணி! டிடிவி தினகரன் காரசாரமான தேர்தல் பிரச்சாரம்

Report Print Murali Murali in இந்தியா

இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக கூறிய திராவிட முன்னேற்றக்கழகம் இன்று அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலும், அதனோடு இணைந்து 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தனது கட்சி வேட்பாளரை இன்று ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்று ஆளும் கட்சி அமைத்திருக்கும் கூட்டணியானது துரோக கூட்டணியாகும். தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்கின்ற மத்திய அரசாங்கத்தோடு இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணி அமைத்துள்ளது.

இதனை துரோக கூட்டணி என்று கூறுவதை விட மானங்கெட்ட கூட்டணி என்றே கூறவேண்டும். மற்றுமொரு கூட்டணியும் ஏற்படுத்தப்பட்டுள்ள. இதனை கொள்கைக்கூட்டணி என்று சொல்லுகின்றார்கள்.

திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன. இலங்கை தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக திராவிட முன்னேற்றக்கழகம் அன்று குற்றம் சுமத்தியது.

எனினும், இன்று அதே காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளது. கேட்டால் இதனை கொள்கைக்கூட்டணி என்று சொல்கின்றார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.