இலங்கையில் சிக்கிய மாணவர்கள்! இடை நிறுத்தப்பட்ட போராட்டங்கள்

Report Print Ajith Ajith in இந்தியா

இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்படவிருந்த கறுப்பு கொடி போராட்டம் மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டம் என்பன இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வரும் போது இந்த போராட்டம் நடத்தப்படவிருந்தது.

10 மீனவர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இந்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பிளஸ் வன் மாணவனான ஜே சேம் மற்றும் பொறியியல்துறை இரண்டாம் வருட மாணவனான துரைப்பாண்டி ஆகிய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இதில் துரைபாண்டி தமது பரீட்சையை தவறவிட்டுள்ளமையால் அவரால் தமது படிப்பை தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விடுமுறை காலமாகையால் ஏனையவர்களுடன் சேர்ந்து மீன்பிடித்தொழிலுக்கு சென்றதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.