மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த அதிகாரியின் பதவி இடை நிறுத்தம்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பதவி இடை நிறுத்தம் செய்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளார்.

அப்போது, மோடி வந்து இறங்கிய உலங்கு வானூர்தியை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்படும். இவர்களின் அனுமதியின்றி பிரதமரிடம் சோதனை நடத்தக் கூடாது.

இந்நிலையில், சாம்பூரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய முகமது மோசின் என்பவர் மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்தார். இந்த சோதனையால், மோடியின் பயணம் 15 நிமிடம் காலதாமதமாகியுள்ளது.

இதனையடுத்து, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி சோதனை செய்ததாக முகமது மொஹ்சினை, தேர்தல் ஆணையம் பதவி இடை நிறுத்தம் செய்துள்ளது.

மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்தது போல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னை இந்திரா காந்தியின் ஆட்சியில் அன்னை இந்திரா காந்தியின் வாகனத்திற்கு அபராதம் விதித்ததால் - கிரண் பேடிக்கு விருது கிடைத்தது,மோடியின் உலங்கு வானூர்தியை சோதனை செய்த IAS அதிகாரிக்கு பதவி இடை நிறுத்தம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers