மாற்று சக்தியாக தமிழகத்தில் தடம் பதிக்கிறதா கமல்ஹாசனின் கட்சி?

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் பல இடங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தின் மாற்று கட்சியாக உருவாகியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. நடிக்க வாய்ப்பில்லாமல் கட்சி தொடங்குகிறார் என கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஆனால் இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக கட்சி ஆகிய கட்சிகளை விட அதிக வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.

இதனால் அதிமுக, திமுக அணிகளுக்கு மாற்று கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவாகி வருவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பல தொகுதிகள் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.