ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை

Report Print Malar in இந்தியா

2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை சி.பி.ஐ இன்று தாக்கல் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டால் பெரும் இழப்பு ஏற்பட்டது என 2007-2008இல் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். இது பெரும் அரசியல் புயலை கிளப்பியது.

தி.மு.க.வின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று தங்களது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க கோரி புதிய மனுவை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே சாவ்லா, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். தற்போதைய லோக்சபா தேர்தலில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் போட்டியிட்டு எம்.பி.க்களாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers