பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தமிழில் பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பிக்கள்

Report Print Sujitha Sri in இந்தியா

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தமிழக எம்.பிக்கள் 38 பேரும் இன்றைய தினம் தமிழில் பதவியேற்று கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவிக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் இன்று பதவியேற்கவுள்ளதுடன், தமிழக எம்.பிக்கள் பதவியேற்றுள்ளனர்.

புதுவையை பிரதிநிதித்துவப்படும் எம்.பியான வைத்திலிங்கம் பதவியேற்று கொண்ட போது, அவர் கடவுள் மீது ஆணையிட்டு தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் ஏனைய தமிழக எம்.பிக்கள் மேசையில் தட்டி இதனை வரவேற்றிருந்தனர்.

அத்துடன் ஜெயக்குமார், வீராச்சாமி, தமிழச்சி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், ஜெகத்ரட்சகன், செல்லக்குமார், செந்தில்குமார், அண்ணாதுரை, விஷ்ணு பிரசாத், கனிமொழி, சுப்பராயன், ஓபி ரவீந்திரநாத்குமார், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட 38 தமிழக எம்.பிக்களும் தமிழில் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers