லொஸ்லியா மற்றும் தர்ஷனுக்கு வாழ்த்தும் இலங்கை வாழ் மக்கள்

Report Print Satha in இந்தியா

பிக்போஸ் சீசன் 3 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக பங்குபற்றியுள்ள செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மற்றும் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற தர்ஷனுக்கு இலங்கை வாழ் மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை பிக்போஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி சீசன் ஒன்று மற்றும் இரண்டு இடம்பெற்றிருந்தன. ஆனால் அதில் இலங்கை சார்பாக எவரும் பங்குபற்றியிருக்கவில்லை.

ஆனால், இந்த தடவை பிக்போஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் பங்குபற்றுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் இவ் இருவர் மீதும் அதீத நம்பிக்கை வைத்துள்ளதுடன், மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அத்துடன் ஈழத்தமிழர்கள் இருவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்தும், பிரார்த்தனை செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.