தலையை திருப்பவில்லை என்றால் ராஜீவ் காந்தி இலங்கையிலேயே இறந்திருப்பார்! விமான நிலையத்தில் அனல் பறக்கும் பேச்சு

Report Print Sujitha Sri in இந்தியா

இலங்கை இராணுவ வீரர் ராஜீவ் காந்தியை ஏன் அடித்தார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்ற போது இலங்கை இராணுவ வீரர் ஒருவர் எங்களுடைய ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் அடிக்கட்டையால் அடித்தார்.

அவர் மட்டும் திறமையாக தனது தலையை திருப்பிக் கொள்ளவில்லை எனில் அங்கேயே இறந்திருப்பார்.

ஒரு சிங்களவர் எப்போதாவது மதிமுக ஆட்களையோ, மற்றவர்களையோ அடித்ததாக நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? ஏன் ராஜீவ் காந்தியை அடிக்கிறார்.

ஏனெனில் அவர் மட்டும் தான் இலங்கையில் தமிழர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார். பாதுகாப்பாக இருக்கிறார் என்ற கோபத்தில் தான் இலங்கை இராணுவ வீரர் அந்த தவறை செய்தார்.

வைகோ போன்றவர்கள் தவறான தகவல்களை சொல்லிக் கொண்டே இருந்தது தான் பிரபாகரன் தோல்வியடைந்ததற்கும், பிரபாகரன் உயிரிழந்ததற்கும் காரணம்.

யுத்தம் நின்று போய்விடும் தமிழ் நாட்டில் நாங்கள் நடத்துகின்றோம். எங்கள் போராட்டத்திற்காக இந்திய அரசாங்கம் பணிந்து இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் தைரியமாக இருங்கள் என பொய்யான தகவல்களை சொன்னது இவர்கள் தான்.

குறைந்தபட்சம் கலைஞரிடமாவது வந்து உண்மையை சொல்லி அவர் வேறு ஏதாவது செய்திருப்பார். எல்லா இடத்திலும் தவறான தகவல்களை சொல்வது.

எனக்கு இலங்கை பிரச்சினை தொடர்பில் நன்கு தெரியும், அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது.

விடுதலைப் புலிகள் மத்தியிலேயே ஒரு கருத்து உண்டு. எனினும் நான் அதனை சொல்ல விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.