மேலும் மூன்று வாரங்கள் பரோல்! சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Sujitha Sri in இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத பரோலில் வெளியில் வந்துள்ள நளினி தனக்கு பரோல் வழங்கப்பட்ட காலத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் நளினிக்கு பரோல் காலத்தை மேலும் மூன்று வாரம் நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் 30 நாள் பரோல் வழங்கி கடந்த மாதம் 5ஆம் திகதி நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், ஜுலை மாதம் 25ஆம் திகதி முதல் நளினி சிறை விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.