ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் இந்தியாவில் கைது

Report Print Ajith Ajith in இந்தியா

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய மூளைதாரியினால் தாம் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டமையை கைது செய்யப்பட்ட சிலர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து மூன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இலங்கையின் தாக்குதல் மூளைதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் காணொளியால் தீவிரக்கொள்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.

நேற்று புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது முகவரகத்தின் அதிபர் ஆலோக் மிட்டால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று ஆலோக்மிட்டால் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 127 பேரில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களும், 19 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களும்,17 பேர் கேரளாவையும், 14 பேர் தெலங்கானாவையும் சேர்ந்தவர்கள் என்று மிட்டால் தெரிவித்துள்ளார்.