பயங்கரவாதத்தை இலங்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது! கராம்பிர் சிங்ஹே

Report Print Ajith Ajith in இந்தியா

இலங்கை வெற்றிகரமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளது என்று இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்திய கடற்படை தளபதி கராம்பிர் சிங்ஹே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை அர்ப்பணிப்புடன் உதவியை வழங்கியது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப்போரின்போது கூட்டு நடவடிக்கையின்மூலம் சிறந்த நன்மையை பெறலாம் என்ற அனுபவம் இந்திய கடற்படைக்கு கிடைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படைகளின் உதவிகளே உலகில் பல்வேறு போர்வெற்றிகளுக்கு வழிவகுத்தன என்றும் தெரிவித்துள்ளார்.