சிறுவன் சுஜித்தை மீட்க புதிய முயற்சி! பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கை

Report Print Jeslin Jeslin in இந்தியா

தமிழ் நாடு, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயதுடைய சிறுவன் சுஜித் விழுந்து 23 மணத்தியாலங்கள் ஆகின்ற நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தையை மீட்க முடியாத காரணத்தினால் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி நாடப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மீட்பு படையினர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புப் படையும் மீட்பு பணி நடவடிக்கையில் இறங்கி உள்ளதால், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி மிக தீவிரமாக நடக்கிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து குழந்தையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையை வெளியே கொண்டு வரும் அதிநவீன கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுவார் என்ற நம்பிக்கை தகவல் கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் உறிஞ்சி எடுக்கும் புதிய முறையை தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. பல வழிகளில் முயன்றும் அது பலன் தராமல் போனதால் தற்போது சிறுவனை அப்படியே சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறையில் மேலே தூக்கும் முயற்சிகளை செய்யவுள்ளனர்.

தேசிய பேரிடர் தங்களுடன் கொண்டு வந்திருந்த நவீன கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையின் தலையில் உள்ள மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இறுதிக் கட்ட முயற்சிகள் என்பதால் சுஜித் விரைவில் மீட்கப்படுவான் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.