சுர்ஜித் மீண்டு குடும்பத்துடன் இணைய ராகுல் காந்தி பிரார்த்தனை

Report Print Gokulan Gokulan in இந்தியா
139Shares

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித், நலமாக திரும்பி வர தாம் இறைவனை பிரார்த்திப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி - மணப்பாறையில், நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தை நலமாக மீட்கப்பட பலரும் பிரார்தனைகளை செய்துவருகையில், பிரபலங்கள் தங்கள் கவலைகளையும்,குழந்தையை விரைவாக மீட்கவும் வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டுவருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் 72 மணி நேரமாக ஆள்துளையில் சிக்கிக் கொண்டுள்ள சுர்ஜித்தை நேரத்தோட காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார்கள். விரைவில் சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைய பிரார்த்திக்கிறேன்”, என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சுர்ஜித்திற்காக குரல் கொடுத்துள்ளார்.