தமிழகத்தின் இந்து அமைப்புக்களுக்கு ஐ.எஸ் கொலை அச்சுறுத்தல்! தேடுதல் தீவிரம்

Report Print Ajith Ajith in இந்தியா

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் இன்று தமிழகத்தின் 6 இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐ.எஸ் அனுதாபிகள் இந்து அமைப்புக்களின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் என்ற தகவல்களை அடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் தேடுதல்கள் நடத்தப்பட்டன.

கோயம்புத்தூர் நகரத்தின் இரண்டு இடங்கள், சிவகங்காவில் ஒரு இடம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டிணம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது 8 கையடக்க தொலைபேசிகள் உட்பட 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே 2014ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் அனுதாபிகள் என்ற சந்தேகிக்கப்படும் 127 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 33 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்று இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

Latest Offers