சபரிமலையின் பெண்கள் நுழைவு தொடர்பில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு!

Report Print Kanmani in இந்தியா

இந்தியாவின் - கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் வழக்கு குறித்த தீர்ப்பு தற்போது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கு, பெரிய அமர்வுக்கு மாற்றப்படுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல,வேறு கோவில்களிலும் மசூதிகளிலும் உள்ளது.மேலும் அனைத்து மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. எனவே இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை 7 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

குறித்த தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.