சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நளினி

Report Print Kanmani in இந்தியா

இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் பரோல் தாமதம் மற்றும் இன்னும் விடுதலை கிடைக்கப்பெறாமை என்பவற்றை கண்டித்து வேலூர் சிறையிலுள்ள நளினி, நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான கடிதமொன்றினையும் சிறைத்துறைக்கு நளினி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே காரணங்களால் முருகன் மற்றும் நளினி இருவரும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து நளினி போராட்டத்தினை கைவிட்டிருந்தார்.

இதற்கிடையே தன்னை கருணை கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு மனுவொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநரை கண்டித்து வேலூர் மத்திய சிறையில் பத்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் முருகனுக்கு ஆதரவாக, மகளிர் சிறையில் உள்ள நளினியும் 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.