இந்திய தேசிய விசாரணை முகவரகம் வார இறுதியில் தமிழகம் முழுவதும் பலத்த சோதனை

Report Print Ajith Ajith in இந்தியா

ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபிகளின் செயற்பாடுகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய தேசிய விசாரணை முகவரகம் வார இறுதியில் தமிழகம் மற்றும் கேரளாவில் சோதனைகளை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காரணவாதி சஹ்ரான் ஹாசிமின் அனுதாபிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில் அலாவூதீன் என்பவரின் வீடும் திருச்சிராப்பள்ளியில் சர்புதீன் என்பவரின் வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதன்போது உபகரணங்கள் உட்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பின்னர் குறித்த இருவரும் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜூனில் கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.