தாக்குதல்தாரி சஹ்ரானின் உதவியாளர்களுக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு நிறுவகம் குற்றப்பத்திரிகை தாக்கல்

Report Print Ajith Ajith in இந்தியா

தமிழகம் - கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்ட இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி சஹ்ரானின் உதவியாளர்களுக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு நிறுவகம் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

அஸாருதீன் மற்றும் ஷேக் ஹியாதத்துல்லா ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கேரளா மற்றும் தமிழகத்தில் இலங்கையில் மேற்கொண்டதைப் போன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் இரகசிய வகுப்புக்களை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் ஹியாத்துல்லா, இலங்கையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.