இந்திய - இலங்கையின் கூட்டுப்பயிற்சியான மித்ரா சக்தி நிறைவு

Report Print Ajith Ajith in இந்தியா

இந்திய - இலங்கை ஏழாம் கட்ட கூட்டுப்பயிற்சியான மித்ரா சக்தி 2019 நேற்று முடிவடைந்துள்ளது.

பூனேயில் உள்ள ஒன்ந்த் இராணுவ நிலையத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இறுதி நிகழ்வின் போது இந்திய இராணுவத்தின் சபாஸ் பிரிவின் தளபதி அனில்குமார் காஸீட் பங்கேற்றுள்ளார்.

இலங்கையின் இராணுவ அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த பயிற்சியில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த தலா 120 படையினர் பங்கேற்றுள்ளதுடன், 14 நாட்களாக இந்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது பயங்கரவாத தடுப்பு உட்பட்ட பல்வேறு திட்ட அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.