பல நாடுகளுடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் புதுடில்லியில் கைது

Report Print Ajith Ajith in இந்தியா

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுடன் தொடர்புகளை கொண்ட போதைவஸ்து கடத்தல்காரர்கள் இந்தியாவின் புதுடில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய செய்தி சேவை ஒன்றின் செய்தியின் படி 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது இவர்களிடம் இருந்து 1300 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவே இந்தியாவில் கைப்பற்றப்பட்ட அதிகளவான கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து இந்தியர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு இந்தோனேசியர், இரண்டு நைஜீரியர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.