இலங்கை அகதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் ஆராய்வு! அமித் ஷா

Report Print Kanmani in இந்தியா

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து ஆராயப்படுமென இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டால், எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி அவர்களினால் நிரந்தரமாக இந்தியாவில் பணியாற்றுவதற்கோ அல்லது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ முடியுமெனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers