நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in இந்தியா

பண்டிகை காலத்தில் உட்சபட்ச பாதுகாப்பு வழங்குவதில் இரணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்கள் செயற்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆயுதப்படைகளின் தளபதியாக, இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் முத்தரப்பு படைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பண்டிகை காலங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.