இலங்கை அகதிகளை நேர்முகம் செய்த ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Ajith Ajith in இந்தியா

குடியுரிமை பிரச்சனை தொடர்பில் இலங்கை அகதிகளை நேர்முகம் செய்த தமிழகத்தின் இரண்டு ஊடகவியலாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விகடன் குழுமத்தின் செய்தியாளர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சட்டத்தின், 188வது பந்தியின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த வழக்கில் அகதி முகாமுக்குள் பிரவேசித்து அங்கு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்த முயன்றதாக குறித்த இரண்டு செய்தியாளர்களுக்கு எதிராகவும் முறையிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதை அடுத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் குறித்த செய்தியாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.