இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்!

Report Print Ajith Ajith in இந்தியா

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவேண்டும் என்று அந்தக்கட்சி கோரியுள்ளது

கட்சியின் பொதுச்சபை இன்று சென்னையில் கூடியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வேறு நாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டால் இலங்கை பிரஜாவுரிமையை இழக்க நேரிடும் என்று அச்சம் இலங்கை அகதிகள் மத்தியில் உள்ளது.

எனவே அவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுள்ளது.

Latest Offers