இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியப் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

Report Print Ajith Ajith in இந்தியா

இலங்கையில் ஒப்பந்தக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பணியாளர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 11 நிர்மாண பணியாளர்கள் இலங்கையில் ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் தமது ஒப்பந்தக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.

60000 ரூபா மாத சம்பளம் தருவதாக கூறி இரண்டு உள்ளூர் ஒப்பந்தக்காரர்களால் கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குறித்த 11 பணியாளர்களுக்கும் 30000 ரூபா மாத்திரமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை கேட்டபோதே ஒப்பந்தக்காரர்களால், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இந்திய உயர்ஸ்தானிகரக தலையீட்டில் குறித்த 11 பணியாளர்களும் இந்தியாவுக்கு இரண்டு கட்டங்களாக திருப்பி அனுப்பட்டுள்ளனர்.