அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்றார் இந்திய பிரதமர்

Report Print Sujitha Sri in இந்தியா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முற்பகல் 11.30 மணிக்கு குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கி வந்த டிரம்ப் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கின்றனர்.

கிரிக்கெட் மைதானத்தை அடையும் வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மேடைகளில் கர்பா நடனம் உள்ளிட்ட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்லும் வழியில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று ஆசிரமத்தை அமெரிக்க ஜனாதிபதி சுற்றிப்பார்க்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.