இந்தியாவுக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி!

Report Print Dias Dias in இந்தியா

இந்தியாவுக்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்கி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமது குடும்பத்தினர், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் இந்தியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நமஸ்தே என்று ஹிந்தியில் பேசி, தனது உரையை தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

உலகின் மிகச்சிறந்த தலைவர்களில் பிரதமர் மோடி முக்கியமானவர். அவர் எனது உண்மையான நண்பர். இந்தியர்கள் அளித்த இந்த மிகச்சிறப்பான வரவேற்பை, எப்போதும் மறக்க முடியாது. சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எப்போதுமே அமெரிக்கா உற்ற நண்பனாக இருக்கும் என உறுதி அளித்த ட்ரம்ப், இந்தியாவுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

3 பில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அகமதாபாத்திலுள்ள மொட்டெரா மைதானத்தில் திரண்டிருந்த பெருமளவிலான மக்கள் வெளியேறியதாக இந்திய ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.