வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு அவசர அறிவிப்பு

Report Print Tamilini in இந்தியா

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-

* இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாக்கள் அனைத்தும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* விசா இல்லாமல் அனுமதிக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாட்டினர் யாரேனும் இந்தியா வர வேண்டும் என்ற கட்டாய சூழல் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவேண்டும்.

* அவசர தேவை இல்லை என்றால் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியா வருவதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் உட்பட அனைவரும் குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

* இந்தியர்கள் அவசர தேவை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பினால் அவர்களும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

* அண்டை நாடுகளில் இருந்து சாலைவழியாக இந்தியாவுக்குள் நுழையும் அனைவரும் சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

* இந்தாலியில் வேலை மற்றும் கல்வி பயில சென்ற இந்தியர்கள் கொரோனா குறித்த சோதனைகளை இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளலாம். சோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம்.

*அவ்வாறு நாடு திரும்பும் இந்தியர்கள் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப் படுத்தப்படுவார்கள்


you may like this video