சீனாவின் 59 செயலிகளுக்கு தடை - இந்திய அரசு நடவடிக்கை

Report Print Murali Murali in இந்தியா

டிக்டொக், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு (Mobile Applications) இந்திய மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையிலேயே, சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கான தடையை பிறப்பித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய சைபர் கிரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா தொடர்புடைய செயலிகள் இந்திய இறையாண்மை மற்றும் இந்திய குடிமக்களின் அந்தரங்க தகவல்களை பாதிக்கும் வகையில் இருக்கின்றன என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமான அளவில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கீழ்க்கண்ட சீனா தொடர்பான 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.