மஹிந்தவின் டுவிட்டர் பதிவிற்கு நரேந்திர மோடி வழங்கியுள்ள பதில்

Report Print Sujitha Sri in இந்தியா

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “செப்டெம்பர் 26ஆம் திகதி, திட்டமிடப்பட்ட மெய்நிகர் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட எதிர்பார்க்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகளிலிருந்து எமது நாடுகளுக்கு இடையிலான பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இட்டுள்ள பதிவில், “இருதரப்பு உறவுகளை விரிவாக மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலத்தில், இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழியை ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.