எங்கே போனாய் பாலு..!! உன் வார்த்தை கேட்கவில்லை

Report Print Jeslin Jeslin in இந்தியா

உலக வாழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு கருப்பு தினம்.. பாடும் நிலாவையை இழந்தது இசை. பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவை அடுத்து பல பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், “ பாலு எங்க போன, எழுந்துவா என்றேன் நீ கேட்கவில்லையே” என இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் உருக்கமாக இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இளையராஜா தனது வீடியோவில்,

பாலு சீக்கிரம் எழுந்து வா.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நான் சொன்னேன்.

நீ கேட்கவில்லை. உன் வார்த்தை கேட்வில்லை.. போய்விட்டாய். எங்கே போனாய்? கந்தவர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா? இங்கு உலகம் ஒரு சூனியமாகிவிட்டது.

பேசுவதற்கு பேச்சு வரவில்லை. சொல்வதற்கு வார்த்தையில்லை. என்ன சொல்வது என தெரியவில்லை.

எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதுக்கு அளவு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.