கடந்த 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த தியாகி திலீபனின் 33வது நினைவுநாள் தமிழகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது உயிர்நீத்த திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விடுதலைச்சிறுத்தை கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.