இலங்கை பிரதமரின் பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர்

Report Print Ajith Ajith in இந்தியா
373Shares

மருந்துத்துறை உட்பட இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்திய முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்த பரிந்துரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிரதமர் ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர் தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீர், சுகாதாரம், வேளாண்மை மற்றும் உற்பத்தி துறைகளில் இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை உருவாக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.