இந்திய பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பு: சம்பந்தர் மறைக்கும் இரகசியம் என்ன?

Report Print Dias Dias in இந்தியா
725Shares

கடந்த 27.11.2020 அன்று இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

எந்தவித முன்னறிவித்தலும் இன்றி 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற அந்த இரகசியக் கூட்டத்தில், இரா.சம்பந்தன் தனியாகக் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இரண்டு நாள் விஜயத்தில் நிரலிடப்படாத சம்பந்தனுடனான அந்தச் சந்திப்பு பற்றிய செய்தி ஊடகங்களுக்கு கசிந்ததைத் தொடர்ந்து, The Hindu பத்திரிகை சம்பந்தனிடம் கேள்வியெழுப்பியிருந்தது.

அந்த கூட்டம் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட சம்பந்தன், ‘அஜித் டோவால் இலங்கையின் அபிவிருத்தி பற்றியும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றியும் தன்னுடன் பேசியதாகத்’ தெரிவித்திருந்தார்.

இந்தியா போன்ற ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் அபிவிருத்தி பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், அதுவும் இலங்கையின் அபிவிருத்தி பற்றிச் சம்பந்தனுடன் இரகசியமாகப் பேசவேண்டிய தேவை இல்லை என்றும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள் சில நோக்கர்கள்.

அந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் சார்ந்த 'முக்கியமான' ஒரு விடயம் சம்பந்தனிடம் கூறப்பட்டிருப்பதாக சில செய்திகள் கசிந்துள்ளன.

இவை சம்பந்தன் பதில்சொல்லவேண்டிய கேள்விகள்:

  • குறிப்பிட்ட அந்தச் சந்திப்பின்போது, சம்பந்தன் Hindu பத்திரிகையிடம் கூறிய விடயங்களை விட வேறு விடயம் எதுவும் சம்பந்தனுடன் பேசப்பட்டதா?
  • எதற்காக சம்பந்தன் தனியாக அந்தச் சந்திப்பை மேற்கொண்டார்?
  • சம்பந்தன் மறைக்கும் அந்த இரகசியம் என்ன?
  • சம்பந்தனிடம் கூறப்பட்ட செய்தி அல்லது பரிமாறப்பட்ட விடயம் மற்றைய கூட்டணித் தலைவர்களிடம் பரிமாறப்பட்டதா?
you my like this video