தனிக் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி! பெங்களூர் சென்று ஆசிப்பெற்றுக்கொண்டார்

Report Print Ajith Ajith in இந்தியா
174Shares

தமிழக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கான முழு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று பெங்களூருக்கு புறப்பட்டுச்சென்று அங்கு தமது சகோதரரான சத்திய நாராயனாவை சந்தித்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆசியைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனவரி மாதத்தில் இருந்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் தமது அனைத்து பட காட்சிகளையும் முடித்துவிடுமாறு ரஜினிகாந்த் தமது இயக்குனர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் அண்ணாத்த என்ற திரைப்படம் அவருடைய இறுதி படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.