இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையில் 'சீக்கிய வீரர்கள்' அதிகம் இணைக்கப்பட்டிருந்தது ஏன் என்கின்ற கேள்விக்கான பதில் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றது.
தமிழ் பேசக்கூடிய மட்ராஸ் ரெஜிமென்ட உட்பட தென் இந்தியப் படையணிகளைத் தவிர்த்து, தமிழ் மக்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை சற்றுமே புரியமுடியாத சீக்கிய வீரர்கள் ஈழத்தில் களமிறக்கப்பட்டதற்கான காரணம் இன்னமும் புரியாத ஒரு புதிராகவே இருக்கின்றது.
தாடி, மீசை, தலைப்பாகை, கட்டுமஸ்தான் உடல்வாகு கொண்ட இந்தி மொழி பேசும் சீக்கிய வீரர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளை போன்ற சம்பவங்களில் அதிக அளவில் ஈடுபட்டுத்திரிந்த காட்சி, ஈழத் தமிழர் மனங்களில் இன்றுவரை நீங்காமலேயே இருந்து வருகின்றது.
சீக்கியர்கள் எதற்காக இலங்கை வந்த இந்தியப் படையில் அதிக அளவில் அங்கம் வகித்தார்கள்?
இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான வன்மத்தை சீக்கியர்கள் ஏன் அதிக அளவில் வெளிப்படுத்தினார்கள்?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்ற ஒளியாவனம் இது: