இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள 20 பேர்

Report Print Banu in இந்தியா
58Shares

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட திரிபடைந்த புதிய வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் மேலும் 14 பேர் பாதிப்படைந்துள்ளர்.

இதன்காரணமாக இந்தியாவில் இப்புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த தொற்றாளர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசாங்கங்களால் சுகாதார வசதிகளுடன்ட செய்து கொடுக்கப்பட்டுள்ள ஒற்றை அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் உருவாகிய இப்புதிய வைரஸ் தொற்று டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு அரசாங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.