முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து சென்னையிலுள்ள சிறிலங்கா தூதரகம் தமிழ் நாட்டுத் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.