அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்! நரேந்திர மோடி

Report Print Ajith Ajith in இந்தியா
67Shares

அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுவதை முன்னிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலான பதிவொன்றிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அந்த பதிவில் மேலும், அயல்நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் திட்டம் கொரோனா தடுப்பூசி விடயத்திலும் தொடரும் என்று உறுதியளித்துள்ளார்.